Skip to content

TopWeb.LK

என்றால் என்ன?

TopWeb.LK என்பது மாதாந்தம் விருது வழங்கும் ஒரு திட்டமாகும், இதுனூடாக BestWeb.LK போட்டியில் நம்பிக்கையுடன் போட்டியிடும் திறனை உங்களுக்கு வழங்கும் அதே வேளையில் உங்கள் இணையதளத்தை சிறந்த நிலையிலிருந்து அதி சிறந்த நிலைக்கு கொண்டு செல்லும் வாய்ப்பையும் வழங்குகிறது.

இந்த விருதின் நோக்கமானது அனைத்து .Lk இணையத்தளங்களின் தர நிலையையும் குறைந்தபட்ச தரத்தை பூர்த்தி செய்யுமளவுக்கு உயர்த்துவதாகும். LK டொமைன் ரெஜிஸ்ட்ரியால் இயக்கப்படும் இந்த விருதுத் திட்டமானது, உங்கள் இணையதளத்தின் தரத்தை மதிப்பிடுவதற்கும் மேம்படுத்துவதற்கும் உங்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்குவதற்காக மாதந்தோறும் நடத்தப்படுகின்றது.

TopWeb.LK

போட்டியில் நீங்கள் ஏன் பங்கேற்க வேண்டும்?

  • TopWeb.LK இப்போது BestWeb.LK 2025க்கான திறவுகோலாக காணப்படுகின்றது. இனி, BestWeb.LK போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு இணையதளமும் TopWeb.LK சின்னத்தைப் பெற வேண்டும்.
  • உங்கள் இணையதளத்தில் உள்ள பாதிப்புகள் மற்றும் அவற்றை மதிப்பிடுவதற்கான வாய்ப்பைப் பெறுதல்.
  • விண்ணப்பதாரர்கள் குறைந்த செலவில் பாதுகாப்பு ஸ்கேன் (security scan) செய்து கொள்ளத் தகுதியுடையவர்களாவர். அத்தோடு அவர்கள், சிக்கல்களை சரி செய்வது தொடர்பான ஆலோசனைகளையும் பெறுவார்கள்
  • நீங்கள் சின்னத்தை வென்றாலும் இல்லாவிட்டாலும், உங்கள் தளத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பதற்கான வழிகாட்டுதலுடன் கூடிய விரிவான அறிக்கையை பெறுவீர்கள்.
  • எவ்வாறு சிக்கல்களை சரிசெய்து அடுத்த விருதுக்காக மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்பன தொடர்பான ஒரு வலையரங்கில் (webinar) கலந்து கொள்வதற்கான இலவச நுழைவு
  • வெற்றியாளர்கள் தங்கள் இணையதளம் மற்றும் சந்தைப்படுத்தல் பொருட்களில் காட்சிப்படுத்தக்கூடிய வகையில் e-சின்னம் மற்றும் சான்றிதழைப் பெறுவார்கள்.
  • வணிக உயர்த்துகைக்கான வாய்ப்புகள்.
  • உங்கள் இணையதளத்தை உருவாக்குவதற்கான கடின உழைப்புக்குப் பின்னால் உள்ள குழுவிற்கு அங்கீகாரம் வழங்க முடியும்.
  • வெற்றிபெறும் இணையதளங்களை முன்னிலைப்படுத்தும் இணைப்புடன் வெற்றியாளர்களின் இணையதளங்கள் TopWeb.LK இணையதளத்தில் இடம்பெறும்.

TopWeb.LK

க்கு யார் விண்ணப்பிக்கலாம்?

இவ் விருதானது .lk டொமைனின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அனைத்து இணையத்தளங்களுக்கும் திறந்திருக்கும்.

உங்கள் இணையதளம் தகுதி பெறுவதற்க்கான அளவுகோல்களுடன் இணங்குகிறதா என்பதைச் சரிபார்க்க விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பார்க்கவும்.

சின்னம் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் என்பதினால் கடந்த 12 மாதங்களில் TopWeb.LK விருதை வென்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. இருப்பினும், மீள்மதிப்பீட்டுக்கு தேவையான குறிப்பிடத்தக்க மாற்றங்களை உங்கள் இணையதளத்தில் செய்தால், அதே வருடத்திற்குள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

TopWeb.LK

க்கு எப்படி விண்ணப்பிப்பது?

ஒரு டொமைனுக்கு விண்ணப்பக் கட்டணம் LKR 6,000 (VAT உட்பட) வசூலிக்கப்படும். விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள விபரங்களைப் பூர்த்தி செய்த பின்பே விண்ணப்பக் கட்டணம் செலுத்தப்படல் வேண்டும். கட்டணத்தை கார்ட் மூலமாகவும் (விசா கார்ட் மற்றும் மாஸ்டர் கார்ட்), சம்பத் விஷ்வா, eZ Cash என்பன மூலமாகவும் செலுத்த முடியும்.

பதிவுகள் TopWeb.LK மூலம் மெற்கொள்ளப்படல் வேண்டும். gov.lk, ac.lk அல்லது sch.lk போன்ற தளங்கள் இணையத்தளப் போட்டிக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில், போட்டியில் பங்கேற்பதற்கான ஒப்பந்தமாக, திணைக்களத் தலைவர், நிறுவனத் தலைவர் அல்லது பாடசாலை அதிபர் ஆகியோரால் அங்கீகரிக்கப்பட்ட விருப்பக் கடிதம் தேவை. இது மிக அவசியம் என்பதோடு, விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் [மாதிரி ஒப்புதல் கடிதத்தைப் பதிவிறக்கவும்]. LK டொமைன் பதிவக நிர்வாகம் தேவைப்பட்டால் மேலதிக தகவலைக் கோருவதற்கான உரிமையைக் கொண்டுள்ளது மற்றும் கொடுக்கப்பட்ட காலத்திற்குள் தகவல்களை அனுப்ப தவறினால், உள்ளீடுகள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது.

TopWeb.LK Awards

வெற்றியாளர்கள்

Testimonials

BestWeb.LK 2025 போட்டியில் பங்கேற்பதற்கு TopWeb.LK சின்னம் அவசியமாகும்

BestWeb.LK என்பது ஒவ்வொரு ஆண்டும் சிறந்த “.LK” இணையதளங்களை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு வருடாந்த போட்டியாகும், அதே சமயம் TopWeb.LK என்பது இணையத்தள தரங்களை உயர்த்துவதற்கான LK டொமைன் ரெஜிஸ்ட்ரியின் மாதாந்த முயற்சியாகும். இரண்டும் “.LK” இணையதளங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சி செய்கின்றன.

2025க்கான BestWeb.LK போட்டியில் பங்கேற்பதற்கு, இணையதளங்கள் முதலில் TopWeb.LK சின்னத்தை பாதுகாக்க வேண்டும். மாதாந்த TopWeb.LK செயல்முறையின் மூலம் மதிப்பிடப்பட்டதற்கிணங்க தரத்தில் உயர்ந்த நிலையை அடைந்துகொள்ளும் இணையத் தளங்கள் மட்டுமே வருடாந்த BestWeb.LK விருதுகளுக்குத் தகுதியானவையாகக் கொள்ளப்படுகின்றது. TopWeb.LK சின்னமானது இணையத்தளம் சிறந்து விளங்குவதற்கான உங்கள் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதுடன், மேலும் இந்த சின்னத்தை அடைவது BestWeb.LK போட்டியில் உங்கள் இணையதளத்தின் வாய்ப்புகளை மேம்படுத்துவதாகவும் காணப்படுகின்றது.