அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

TopWeb.LK விருதுக்கு யார் விண்ணப்பிக்கலாம்?

இந்த விருது .lk டொமைன் தளங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அனைத்து இணையத்தளங்களுக்கும் திறந்திருக்கும். விதிவிலக்குகளைப் பற்றி அறிய, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் உள்ள தகுதி அளவுகோல்களைப் பார்க்கவும்.

TopWeb.LK விருதுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

www.topweb.lk  இல் கிடைக்கும் ஒன்லைன் உள்நுழைவு இணைப்பைப் பயன்படுத்துவதன் மூலமாக

TopWeb.LK விருதுக்குள் நுழைய தகுதியற்றவர்கள் யார்?

 1. பின்வருவனவற்றிற்கு உட்பட்ட இணையதளங்கள் விருதுக்காக போட்டியிட தகுதி பெறாது:
  • சட்டவிரோதமான, ஆபாசமான, தவறான அல்லது விபரீதமான உள்ளடக்கம் கொண்ட இணையதளங்கள்.
  • மோசமான ,தரம் குறைந்த, புண்படுத்தும் அல்லது அவதூறு உள்ளடக்கம் கொண்ட இணையதளங்கள்.
  • வேறு எந்த காரணத்திற்காகவும் LK டொமைன் பதிவக நிர்வாகத்தால் போட்டிக்குத் தகுதியற்றதாகக் கருதப்பட்ட இணையதளங்கள்.
 2. .com அல்லது திசைதிருப்பும் (ரி டிரெக்டின்) இணையதளங்கள் இவ் விருதுக்கு தகுதியற்றவை.
 3. விண்ணப்பத்தின் போது மற்றும் மதிப்பீட்டு காலம் முழுவதும் காலாவதியான .lk டொமைன்கள்.
 4. பன்மொழி இணையதளங்கள், அவற்றின் உள்ளடக்கம் யூனிகோட் தரநிலைகளின்படி இருந்தால் மட்டுமே இப் போட்டிக்குத் தகுதி பெறும்.
 5. கடந்த 12 மாதங்களில் TopWeb.LK யில் விருது வென்றவர்கள். (உதா; 2023 பிப்ரவரி முதல் 2024 ஜனவரி வரையிலான TopWeb.LK வெற்றியாளர்கள் 2024 பிப்ரவரி மாதத்திற்கான TopWeb.LK போட்டிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.).

TopWeb.LK விருதுக்கு நான் எப்போது விண்ணப்பிக்கலாம்?

போட்டி ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும். காலவரையின்படி விண்ணப்பங்கள் செயல்படுத்தப்படும்.

இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவிற்குப் பிறகு (தாமதமான விண்ணப்பம்) விண்ணப்பிக்கலாமா?

ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணமின்றி, மின்னஞ்சல் மூலம், விண்ணப்ப இறுதித் திகதிக்குப் பின்னர் தாமதமாகப் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

TopWeb.LK விருதுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கான எனது ஒப்பந்தம் எப்போது செயல்படும்?

விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் போது TopWeb.LK விருதுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு நீங்கள் ஒப்புக்கொண்டதாகக் கருதப்படுகிறீர்கள்.

அனுப்பப்பட்ட விண்ணப்பத்தைத் தவிர வேறு ஏதேனும் மேலதிக தகவல்களை வழங்க வேண்டுமா?

கொடுக்கப்பட்ட காலத்திற்குள் தகவல் அனுப்பப்படாவிட்டால், உள்ளீடுகள் மதிப்பீடு செய்யப்படாது, தேவைப்பட்டால் மேலதிக தகவலைக் கோருவதற்கான உரிமையை LK டொமைன் பதிவக நிர்வாகம் கொண்டுள்ளது.

வெற்றியாளர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்?

வெற்றிபெறும் இணையதளத்தைத் தேர்ந்தெடுப்பது, LK டொமைன் பதிவக நிர்வாகத்தின் விருப்பத்திற்கு உட்பட்டது மற்றும் விண்ணப்பதாரர்களின் பேச்சுவார்த்தைக்குட்படுத்தப்படாது.

இணையத்தளங்களின் பாதுகாப்புச் சிக்கலுக்கு பதிலளிக்கும் வகையில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன?

விண்ணப்பித்த இணையதளங்களை “காலவரையில்” குறிப்பிடப்பட்டுள்ள “போட்டி காலத்தில்” எந்த நேரத்திலும் வெளிப்புற இணையதள ஸ்கேன் இனை மேற்கொள்ளப்படலாம்.

TopWeb.LK விருதை வென்றுள்ளார்கள் என வெற்றியாளர்களுக்கு எவ்வாறு அறிவிப்பது?

கொடுக்கப்பட்ட காலவரையின்படி வெற்றியாளர்களின் விபரங்கள் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும்.

Skip to content