விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

தகுதி பெறுவதற்க்கான அளவுகோல்கள்

 • இவ் விருது .lk தளத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அனைத்து இணையதளங்களுக்கும் திறக்கப்பட்டுள்ளது.
 • .com அல்லது திசைதிருப்பும் (ரி டிரெக்டின்) இணையதளங்கள் இவ் விருதுக்கு தகுதியற்றவை.
 • பங்கேற்கும் .lk டொமைன் இணையம் விண்ணப்பிக்கும் நேரத்திலும் மதிப்பீடு செய்யும் காலத்திலும் காலாவதியாகாமல் இருத்தல்
 • பின்வருவனவற்றிற்கு உட்பட்ட இணையதளங்கள் விருதுக்காக போட்டியிட தகுதி பெறாது:
  • சட்டவிரோதமான, ஆபாசமான, தவறான அல்லது விபரீதமான உள்ளடக்கம் கொண்ட இணையதளங்கள்.
  • மோசமான ,தரம் குறைந்த, புண்படுத்தும் அல்லது அவதூறு உள்ளடக்கம் கொண்ட இணையதளங்கள்.
  • வேறு எந்த காரணத்திற்காகவும் LK டொமைன் பதிவக நிர்வாகத்தால் போட்டிக்குத் தகுதியற்றதாகக் கருதப்பட்ட இணையதளங்கள்.
 • பன்மொழி இணையதளங்கள், அவற்றின் உள்ளடக்கம் யூனிகோட் தரநிலைகளின்படி இருந்தால் மட்டுமே இப் போட்டிக்குத் தகுதி பெறும்.
 • கடந்த ஆண்டுகளின் BestWeb.LK போட்டியின் தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் ஒட்டுமொத்த பிரிவுகளில் வெற்றி பொற்றவர்கள் இப் போட்டிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.
 • கடந்த 12 மாதங்களில் TopWeb.LK யில் விருது வென்றவர்கள். (உதா; 2023 பிப்ரவரி முதல் 2024 ஜனவரி வரையிலான TopWeb.LK வெற்றியாளர்கள் 2024 பிப்ரவரி மாதத்திற்கான TopWeb.LK போட்டிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.).

விண்ணப்பதாரர் மற்றும் தொடர்பாடல் அளவுகோல்கள்

 • இணையதளத்தில் பதிவு செய்பவர்கள் விருதுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம். தள நிர்வாகி, தொழில்நுட்ப அல்லது விலைப்பட்டியல் பயன்பாடுகளில், பதிவாளரின் ஒப்புதல் கட்டாயமாகும்.
 • . gov.lk, ac.lk அல்லது sch.lk போன்ற தளங்கள் இணையத்தளப் போட்டிக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில், போட்டியில் பங்கேற்பதற்கான ஒப்பந்தமாக, திணைக்களத் தலைவர், நிறுவனத் தலைவர் அல்லது பாடசாலை அதிபர் ஆகியோரால் அங்கீகரிக்கப்பட்ட விருப்பக் கடிதம் தேவை. இது மிக அவசியம் என்பதோடு, விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். [மாதிரி ஒப்புதல் கடிதத்தைப் பதிவிறக்கவும்]
 • விண்ணப்பதாரர் அனுப்பிய அனைத்து மின்னஞ்சல்களையும் பின்பற்றி உடனடியாக பதிலளிக்க வேண்டும்.
 • அனைத்து விண்ணப்பதாரர்களும் அவர்கள் வழங்கிய தொடர்பு விவரங்களூடாக தொடர்பு கொள்ள முடியுமாக இருத்தல் வேண்டும்.
 • [email protected] இலிருந்து ஒப்புதல் மின்னஞ்சலைப் பெற்ற பிறகு, குறித்த இணையதளம் போட்டியில் பங்கேற்றதாகக் கருதப்படும்.

தெரிவுக்கான வரன்முறைகள்

 • சமர்ப்பிக்கப்பட்ட இணையதளங்கள் LK டொமைன் பதிவக நிர்வாகம் அல்லது குழுவின் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படும்.
 • உள்ளீடுகள் மதிப்பீடு அளவுகோல்களின்படி LK டொமைன் பதிவக தளக் குழுவால் தீர்மானிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படும்.
 • வெற்றிபெறும் இணையதளத்தைத் தேர்ந்தெடுப்பது LK டொமைன் பதிவக நிர்வாகத்தின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் மாத்திரமே செய்யப்படுவதோடு, விண்ணப்பதாரர்களின் பேச்சுவார்த்தைக்குட்படுத்தப்படாது.
 • விண்ணப்பித்த இணையதளங்களை “காலவரையில்” குறிப்பிடப்பட்டுள்ள “போட்டி காலத்தில்” எந்த நேரத்திலும் வெளிப்புற இணையதள ஸ்கேன் இனை மேற்கொள்ளப்படலாம்.

General

 • விருது வழங்கும் செயல்முறையின் போது ஏதேனும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால், LK டொமைன் பதிவக தள நிர்வாகத்தின் முடிவே இறுதியானதாகக் கருதப்படும்.